மலேசியாவில் வாகன விற்பனை கடந்த மாதம் 10 விழுக்காடு அதிகரிப்பு

கோலாலம்பூர்:

மலேசியாவின் புதிய வாகனங்கள் விற்பனை கடந்த பிப்ரவரி 2024 இல் 64,290 வாகனங்களில் இருந்து மார்ச் 2024 இல் 10 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது 71,052 வாகனங்களாக பதிவாகி இருந்தது என்று மலேசியன் ஆட்டோமோட்டிவ் அசோசியேஷன் (MAA) தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 2024 அன்று முடிவடையும் நிதியாண்டு மற்றும் ஹரி ராயா பண்டிகை கால விளம்பரப் பிரச்சாரங்கள், நிறுவனங்களின் டெலிவரி அவசரத் தன்மை என்பன அதிக வாகனங்கள் விற்பனைக்கு ஆதாரமாக இருப்பதாக சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் 64,760 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக MAA குறிப்பிட்டது, இது மார்ச் 2023 இல் விற்பனை செய்யப்பட்ட 70,940 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது ஒன்பது சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here