மரண இறுதி ஊர்வலத்தின் போது, எஸ்.ஓ.பியை மீறியதாக 11 பேருக்கு 4 நாட்கள் போலீஸ் தடுப்புக்காவல் வழங்கப்பட்டது.

பட்டர்வொர்த் (ஜூன் 21) : அண்மையில் நடந்த மரண இறுதி ஊர்வலத்தின் போது நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மீறியதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட 11 பேரை இன்றிலிருந்து (ஜூன் 21) வியாழக்கிழமை (ஜூன் 24) வரை 4 நாட்கள் போலீஸ் விசாரணக்கு உதவும் பொருட்டு தடுப்புக்காவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பட்டர்வொர்த் மாவட்ட உதவி நீதிமன்ற பதிவாளர் நைகல் ஜிரின் இன்று (ஜூன் 21) குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 ன் கீழ் நான்கு நாள் தடுப்புக்காவல் உத்தரவை வழங்கினார்.

சங்கங்கள் சட்டம் 1966 இன் பிரிவு 43, ​​தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269, தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் விதிமுறை 921 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.

கடந்த வியாழக்கிழமை (ஜூன் 17), தெலுக் ஆயர் தாவாரில் இருந்து ஜாலான் சிராமில் உள்ள மயானம் வரை இறுதி ஊர்வலத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் மீது கோவிட் -19 எஸ்ஓபிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, நேற்று (ஜூன் 20) குறித்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இம் மரண ஊர்வலத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இதனைத் தொடர்ந்து, இவ் வீடியோ தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே போலீசார் விசாரணையைத் தொடங்கினர் எனவும் அறியப்படுகிறது. மேலும், 51 விநாடிகள் கொண்ட குறித்த வீடியோவில் ஒரு குழுவினர் மற்றும் பலர் ஊர்வலத்தில் நடனமாடுவதைக் காட்டியது என்றும் அறியப்படுகின்றது .

இவ் வீடியோவில் காணப்பட்ட 15 முதல் 35 வயது வரையுள்ள 11 ஆண்களை ,ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டர்வொர்த் மற்றும் மாக்மண்டினைச் சுற்றியுள்ள பல இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு செபெராங் பிறை உதவி கமிஷன் நூர்ஸைனி முகமட் நோர் கூறியிருந்தார்.

“சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் மற்றைய நபர்களை நாங்கள் இன்னும் கண்காணித்து வருகிறோம்”என்றும் அவர் கூறினார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பாக இறுதிச் சேவை நிறுவன மேலாளரின் அறிக்கையை நாங்கள் பதிவு செய்துள்ளோம் என்றும் அவரைப் பொறுத்தவரை, அவர் தகனத்திற்கு செல்லும் வழியில் எந்த இடத்திலும் சவப்பெட்டியை அகற்ற முடியாது என்று அவர் குழுவிடம் கூறினார், ஆனால் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்,” என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட அந்த ஊர்வலத்தில் 15 முதல் 20 பேர் இருந்ததாகவும் அவர்கள் செபராங் ஜெயா மருத்துவமனையில் காசநோயால் இறந்த 23 வயது இளைஞனின் நண்பர்கள் என்று நம்பப்படுவதாகவும் நூர் செய்னி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here