டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் துணை பிரதமராக நியமனம்

கோலாலம்பூர்: டத்தோ ஶ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சரின் பதவிகளை வகிப்பார். இந்த விவகாரத்தை பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது

இஸ்மாயில் சப்ரி  நியமனம் நாட்டின் நிர்வாகத்தை நிர்வகிக்கவும், தற்போது சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பிரதமருக்கு உதவ முடியும் என்று அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

இதற்கிடையில், வெளியுறவு அமைச்சரின் பதவியை வகிக்கும் டத்தோ ஶ்ரீ  ஹிஷாமுதீன் துன் ஹுசைனுக்கு இப்போது மூத்த அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நியமனங்களும் மாமன்னருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று PMO தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here