ஜாலான் அம்பாங்கில் உள்ள இங்கிலாந்து விசா மையம் திங்கள்கிழமை (ஜூலை 12) முதல் மீண்டும் திறக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11:

ஜாலான் அம்பாங்கில் உள்ள விஎஃப்எஸ் (VFS) குளோபல் இங்கிலாந்து விசா விண்ணப்ப மையம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 12) முதல் மீண்டும் திறக்கப்படும்.

“கோவிட் -19 நிலைமை மற்றும் அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காரணமாக மலேசியாவில் உள்ள மற்ற அனைத்து VFS குளோபல் விசா விண்ணப்ப மையங்களும் மூடப்பட்டுள்ளன” என்றும் “VFS குளோபல் மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளின் உத்தரவு மற்றும் விசா விண்ணப்பிக்கப்படும் நாட்டின் இராஜதந்திர பணிக்கு இணங்கமாகவே  செயல்படுகிறது,” என்றும்  அது நேற்று (ஜூலை 10) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் முக்கிய தேவைகளின் பொருட்டு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளவர்களினை கருத்தில் கொண்டு மீண்டும் இம்மையம் திறக்கப்படவுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அது அறிவுறுத்தியது.

“உள்ளூர் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப தனிநபர் இடைவெளி , உடல் வெப்பநிலை அளவீடு செய்வது மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும் என்றும் மேலும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எங்கள் மையத்தில் இடமளிக்கப்படும்” என்றும் VFS குளோபல் தெரிவித்துள்ளது.

விசாவிற்கான செயலாக்க நேரம் குறித்து வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு, VFS குளோபல் இந்த காலம் விசா வகையைப் பொறுத்து வேறுபடும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here