வெளிநாட்டுத் தொழிலாளி சக நாட்டு தொழிலாளியை கொலை செய்து உடலை கட்டுமானத் தளத்தில் புதைத்ததாக நம்பப்படுகிறது

சிரம்பான்: பங்களாதேஷ் ஆடவர் ஒருவர் தனது சக நாட்டு ஆடவரை கொன்று, அவரது உடலை ஒரு தொழிலாளார் குடியிருப்புக்கு அருகில் இங்குள்ள கட்டுமானத் தளத்தில் புதைத்ததாகக் கூறப்படுகிறது.

சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. முகமட் சையத் இப்ராஹிம் கூறுகையில், கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த 29 வயதான சந்தேகநபர் அதே இடத்தில் பணிபுரிந்த  30 வயதான பாதிக்கப்பட்டவருடன் தவறாகப் புரிந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

அவர் பாதிக்கப்பட்டவரை ஒரு மரத்தடியால் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரது உடலை அருகாமையிலுள்ள இடத்தில் புதைத்துள்ளார். கொலயுண்டவரை சில தினங்கள் பார்க்காததால் முதலாளி போலீசில் புகார் செய்ததாக கூறினார்

நேற்று (ஜூலை 21) மாலை 6.30 மணியளவில் சந்தேக நபர் தப்பிக்க முயன்றதாக ஏசிபி முகமட் சைட் கூறினார். பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடம் குறித்து முதலாளி சந்தேக நபரிடம் கேள்வி கேட்கத் தொடங்கியதால் அவர் பிடிப்பட்டார்.

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மரத் துண்டையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவரும் சந்தேகநபரும் ஒரு மாதமாக தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வருவதாகவும், ஜூலை 13 ம் தேதி தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 ன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here