கப்பளா பத்தாஸ்: செபராங் ஜெயாவைச் சேர்ந்த 18 வயதான தொழிற்சாலை தொழிலாளி ஒருவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ஜாலான் சுங்கை துவாவில் உள்ள சாலையோரக் கம்பத்தில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வடக்கு செபராங் பிறை ஓசிபிடி உதவி ஆணையர் நூர்சைனி முகமட் நூர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 8.05 மணிக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு போலீஸ் விரைந்ததாகவும் கூறினார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையின் இடது பக்கத்தில் உள்ள கம்பத்தில் மோதியதால், இவ்விபத்து நடந்ததாக நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.
தலையில் மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
“பதிக்கப்பட்டவரின் சடலம் கப்பளா பத்தாஸ் மருத்துவமனை தடயவியல் பிரிவில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.”
மேலும், சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் ஏசிபி நூர்சைனி கூறினார்.
அனைத்து சாலைப் பயனர்களும் எப்போதும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும், அவர்கள் சாலையில் இருக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
“கோவிட் -19 தொற்று வேகமாக பரவும் இக்காலங்களில், வெளியில் செல்வதற்கு முக்கியமான விஷயங்கள் இல்லை என்றால் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்” என்றும் அவர் ஒரு அறிக்கையில் கூறினார்
























