மாவட்ட அளவிலான ஆங்கில மொழி  கதை சொல்லும் போட்டி ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி உர்மிதா சாதனை

மஞ்சோங், செப். 13-

மஞ்சோங் மாவட்ட கல்வி இலாகாவின் ஏற்பாட்டில் இம்மாதம் 6ஆம் தேதி இயங்கலை  வழி நடைபெற்ற ஆங்கில மொழி கதை சொல்லும் போட்டியில் ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி உர்மிதா விஸ்வம் முதல் நிலையில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இப்போட்டியில் மஞ்சோங் மாவட்டத்திலுள்ள தமிழ், சீன மற்றும் தேசிய பள்ளிகளைச் சேர்ந்த மூவின மாணவர்களும்  கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

தமிழ், சீன மற்றும் தேசியப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இக்கதை சொல்லும் போட்டியில் ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவி உர்மிதா விஸ்வம் முதல் நிலையில் வாகை சூடி தமிழ்ப்பள்ளிகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆறாம் ஆண்டு மாணவியான உர்மிதா திறமையான மாணவு அவார். பள்ளி, மாவட்டம், மாநில நிலையிலான எந்தவொரு போட்டியானாலும் தன்னுடைய பெற்றோரின் முழு ஒத்துழைப்புடன் மிகுந்த ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கலந்து கொள்வார் என இப்பள்ளியின் தலைமையாசிரியர்  கிருஷ்ணன் நடராஜா கூறினார்.

மாணவி உர்மிதாவுக்கு சிறப்பான முறையில் பயிற்றுவித்து இக்கதை சொல்லும் போட்டியில் வெற்றி பெற காரணமாக இருந்த ஆசிரியை திருமதி மயூரிக்கும்,  முதல் நிலையில் வாகை சூடி பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்த மாணவி உர்மிதாவுக்கும் தலைமையாசிரியர் கிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் என பலரும் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here