பினாங்கில் கோவிட்-19 காரணமாக மேலும் இரண்டு தினசரி சந்தைகள் மூடப்பட்டன

ஜோர்ஜ் டவுன்: சந்தையில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே கோவிட் -19 தொற்றுக்கள் பதிவாகியுள்ளதால், லெபோ சிசில் மற்றும் சவ்ராஸ்டா சந்தை ஆகிய இரண்டு சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

பினாங்கு தீவு நகர கவுன்சிலின் கூற்றுப்படி, லெபோ சிசில் தினசரி சந்தைப் பிரிவில் 182 கடைகள் இருந்தன என்றும் சவ்ராஸ்டா தினசரி சந்தையில் 157 சிறிய கடைகளும், உணவு வளாகத்தில் 56 கடைகளும், அத்துடன் வளாகத்திற்கு வெளியே 62 தற்காலிக வியாபாரிகளின் கொட்டகைகளும் அடங்கும் என்றார்.

“லெபோ சிசில் சந்தையில் 8 பேருக்கும் சவ்ராஸ்தா சந்தையில் 14 பேருக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

“கால அவகாசமின்றி உடனடியாக செயல்படும் வகையில் இவ்விரு சந்தைகளும் மூடப்படுவதால், கிருமிநாசினி மற்றும் சுத்திகரிப்பு வேலைகளை எளிதாக்கும்” என்றும் பினாங்கு தீவு நகர கவுன்சில் இன்று கூறியது.

கவுன்சிலின் கூற்றுப்படி, கோவிட் -19 இடர் மதிப்பீடுகள் அது மற்றும் மாநில சுகாதாரத் துறையினருடன் சேர்ந்து கூட்டாக மேற்கொள்ளப்படும் என்றதுடன் இவ்வாறு உடனடியாக சந்தைகளை மூடுவது கோவிட் -19 பரவுவதைத் தடுக்க மிகவும் உதவியாக இருக்கும்,” என்றும் அது மேலும் கூறியது.

மேலும் பண்டார் பாரு ஆயர் ஈத்தாமில் உள்ள ஃபார்லிம் மார்க்கெட் மற்றும் உணவு வளாகத்தில் 18 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அது மூடப்பட்டு , ஒரு வாரத்திற்குள் இச்சந்தைகள் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.

வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நேர்மறை கோவிட் -19 தொற்றுக்கள் பரவுவதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல சந்தைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

அவற்றில் பாடாங் தேம்பாக் சந்தை, செபராங் ஜெயா சந்தை, மாக் மாண்டின் சந்தை, புலாவ் முத்தியாரா மொத்த விற்பனை சந்தை, சாய் லெங் பார்க் சந்தை, ஜாலான் பேராக் சந்தை மற்றும் புக்கிட் மெர்தாஜம் சந்தை ஆகியவை அடங்கும்.

பினாங்கு மாநிலத்தில் கடந்த வாரங்களில் தொடர்ச்சியான நான்கு இலக்க தினசரி கோவிட் -19 நேர்மறை தொற்றுக்களை பதிவுசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here