அல்ஜீரியாவை 2 தசாப்தங்களாக ஆட்சி செய்த அல்ஜீரியாவின் முன்னாள் அதிபர் காலமானார்

அல்ஜீரியாவை நீண்டகாலங்களாக ஆட்சி செய்த முன்னாள் அதிபரான அப்தெலாசிஸ் பூடெஃப்லிகா (Aptelasis bouteflika) தனது 84 ஆவது வயதில் காலமானார்.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அல்ஜீரிய அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்த அப்தெலாசிஸ் பூட்டெஃப்லிகா (Aptelasis bouteflika), 1999 – 2019 வரை அல்ஜீரியாவின் நீண்டகால அதிபராக பணியாற்றினார்.

அல்ஜீரியாவின் சுதந்திரப் போரின் சிரேஷ்ட வீரரான பூடெஃப்லிகா(Aptelasis bouteflika), 2019 ஏப்ரலில் இராஜினாமா செய்வதற்கு முன்பு இரண்டு தசாப்தங்களாக வட ஆப்பிரிக்க நாட்டை ஆட்சி செய்தார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு பக்கவாத நோய்க்கு பின்னர், அவர் பொது இடங்களில் தோன்றுவது அரிதானதாகவே காணப்பட்டு வந்தது. அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைக் கோரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாற்கான பூடெஃப்லிகா (Aptelasis bouteflika) 2019 இல் இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here