பிக்-அப் லோரியை போக்குவரத்துக்கு எதிரான முறையில் செலுத்தியதால், இருவர் பலியான சம்பவத்தில் தேவாஸ்வினுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு

ஷா ஆலம்: எட்டு நாட்களுக்கு முன்பு பெடரல் நெடுஞ்சாலையில் காரை வழமைக்கு மாறாக எதிரான திசையில் செலுத்தி, இரண்டு பதின்மவயதினரைக் கொலைசெய்ததாக 24 வயதான விளம்பரப்பிரிவு நிர்வாகியான தேவாஸ்வின் என்பவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

K.தேவாஸ்வின் என்ற வாலிபர், கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி கோலாலம்பூர் நோக்கி செல்லும் பெடரல் நெடுஞ்சாலையின் 8.6 ஆவது கிலோமீட்டரில், அதிகாலை 1.50 மணியளவில், தனது காரை போக்குவரத்துக்கு முரணாக எதிர் திசையில் செலுத்தியதன் மூலமாக முகமட் ஹாபிஸ் சயமிர் துல் அஸ்ரி (19) மற்றும் நூர் ஆஃபிகா அப்துல் கர்ம் (18) ஆகியோருக்கு மரணம் விளைவித்தார் என்று கூறப்படுகிறது.

மரணதண்டனை விதிக்க வழிசெய்யும் இக் குற்றத்தை விசாரிப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால் நீதிபதி நூர் பைசா அப்துல் சனி முன் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.
எனவே இந்த வழக்கு பின்னர் உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்கு பிரேத பரிசோதனை, புஸ்பாகாம் அறிக்கைகள் கிடைக்கும் வரை அக்டோபர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பில் வழக்கறிஞரான ஆர்.புஷ்பா மற்றும் கே.தனுஜா ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் சுகோர் அபு பக்கர் ஆஜரானார்.

இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்பதால் தனது கட்சிக்காரனான தேவாஸ்வின் சிறையில் அடைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று புஷ்பா கூறினார். “எனினும், தேவாஸ்வினின் உடல்நிலை சரியில்லாததால், அவர் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று நான் மாஜிஸ்திரேட்டுக்கு தெரிவித்துள்ளேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here