B40 மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகளில் 37,000 க்கும் மேற்பட்டவை இன்னும் மாணவர்களை சென்றடையவில்லை; கல்வி அமைச்சர்

கோலாலம்பூர் : வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள (B40) குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இலவச மடிக்கணினிகளில் 37,000 மடிக்கணினிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

2021 வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹஷானா நேசனலின் கீழ் உள்ள அறக்கட்டளையான யாயாசான் ஹஷானா மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 150,000 இலவச மடிக்கணினிகளை வழங்க தபுங் செர்டிக் (Tabung Cerdik ) உறுதி கொண்டிருந்தது.

நேற்று நாடாளுமன்றத்தில், புக்கிட் பிந்தாங் எம்பி ஃபாங் குய் லூன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக, மூத்த கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் கூறுகையில், “செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நாடு முழுவதுமுள்ள 910 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 112,356 இலவச மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இருப்பினும், 16,577 மடிக்கணினிகள் யாயாசான் ஹசானாவால் பெறப்பட்டு, அவை “எதிர்காலத்தில்” மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றார்.

“மீதமுள்ள 21,067 மடிக்கணினிகள் யாயாசான் ஹசானாவால் பெறப்பட்டவுடன், அவையும் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்” என்றார்.

இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில், 130,000 மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் கூறினார்.

தேசிய மீட்பு உச்சிமாநாட்டில் பேசிய டெங்கு ஜஃப்ருல், இந்த மாத இறுதிக்குள் Tabung Cerdik அனைத்து இலவச மடிக்கணினிகளையும் வழங்கி முடிப்பதற்கான சரியான பாதையில் இருப்பதாகவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here