சுங்கை செரெண்டா ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது மரம் விழுந்து 10 வயது சிறுவன் பலி

சுங்கை செரெண்டாவில் நீந்திக்கொண்டிருந்தபோது, மரம் விழுந்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் நொரசம் கமிஸ் இன்று (செப்டம்பர் 26) மதியம் 2.39 மணிக்கு தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாகக் கூறினார்.

இந்த சம்பவம் செரெண்டா Brickhouse அருகே நடந்தது. 10 வயது சிறுவனும் அவரது 11 வயது சகோதரனும் அருகில் உள்ள ஆற்றில் நீந்திக்கொண்டிருந்த போது ஒரு மரம் விழுந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, இரண்டு சிறுவர்களும் ஏற்கனவே ராவாங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார். மேலும் சோதனைகளில் இளைய பையன் உயிரிழந்தது தெரியவந்தது என்றார்.11 வயது சிறுவன் சிறிய காயங்களுடன் தப்பினார்  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here