நாங்கள் சீனாவின் கருத்துக்களை மட்டுமே கேட்கிறோமே தவிர அறிவுறுத்தல்களையல்ல ; பாதுகாப்பு அமைச்சர்

ஜோகூர் பாரு: அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட முக்கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை (AUKUS) குறித்து சீனாவை அரசாங்கம் அணுகியதன் காரணம், இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை பெற விரும்பியது மட்டுமே என்று மூத்த பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் தெரிவித்தார்.

சீனாவிடம் இருந்து மலேசியா “அறிவுறுத்தல்களைப் பெறுகிறது” என்ற எதிர்க்கட்சி குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஹிஷாமுடின், மலேசியா சீனாவின் கருத்துகளையும் இந்த விஷயத்தில் அதன் சாத்தியமான பதில்களையும் தெரிந்து கொள்வதில் ஒரு தவறுமில்லை என்றார்.

“நேற்று நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சீனா விடயத்தில் கூறியது ஆதாரமற்றது, ஏனென்றால் சீனாவிடம் இருந்து மலேசிய அறிவுறுத்தல்களைப் பெறுவதில்லை என்று நான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன்” அவர் நேற்று (செப்.25) நடைபெற்ற உலு திராம் முகாமில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசியா நடுநிலையாக இருக்க வேண்டும் மற்றும் எந்த உலக வல்லரசையும் நோக்கி சாய்ந்துவிடக்கூடாது, குறிப்பாக AUKUS பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் சமீபத்திய அறிக்கை குறித்து ஹிஷாமுடினிடம் கருத்து கேட்கப்பட்டது.

மேலும், சீனாவுடன் நல்ல உறவை வைத்திருப்பது மலேசியா தனது இறையாண்மையையும் நிலைப்பாட்டையும் சமரசம் செய்யும் என்று அர்த்தமல்ல என்று செம்ப்ராங் எம்.பி கூறினார்.

அத்தோடு “மலேசியாவின் வலிமை என்னவென்றால், இந்த இரண்டு வல்லரசுகளுக்கும் (அமெரிக்கா மற்றும் சீனா) நாங்கள் நெருக்கமான உறவில் இருக்கிறோம், எங்கள் உறவு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்டது, மேலும் அவர்கள் எங்கள் நிலைப்பாட்டை மதிக்கிறார்கள்,” என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here