நீங்கள் ஊட்டச்சத்து மாத்திரை (Dietary supplements) அதிகம் உட்கொள்பவரா? அதன் நன்மை ,தீமை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தற்போதைய சூழலில் பலா் தமது நெருக்கடியான பணிச்சூழல் மற்றும் வேலைப்பளு காரணமாக சாியான நேரத்தில் உணவு உண்ண இயலாத நிலையில் இருக்கின்றனா். அதனால் அவா்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.சமீப காலமாக பலா் தமது ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்வதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை (Dietary supplements) அதிகமாக எடுத்துக் கொள்கின்றனா்.

வேலைக்கு செல்கிறவா்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களில்  தீவிரமாக உடற்பயிற்சி செய்கிறவா்கள், ஆரோக்கியமான ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மிக எளிதாக தமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். தற்போது பலா் வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இந்த புதிய பழக்கமானது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆகவே இந்த பதிவில் ஊட்டச்சத்து மாத்திரைகளில் உள்ள நன்மைகள் மற்றும் ஆபத்துகளை சற்று  பாா்க்கலாம்.

ஊட்டச்சத்து மாத்திரைகளின் நன்மைகள்:

  • சிலருக்கு தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கக்கூடிய உணவுகளைத் தினந்தோறும் சமைப்பது என்பது இயலாத காாியமாக இருக்கலாம். இந்த நிலையில் அவா்களுடைய ஊட்டச்சத்துத் தேவையை நிறைவு செய்வதற்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் உதவியாக இருக்கின்றன.
  • இயற்கை உணவுகள் மிக எளிதாக மற்றும் மிக விரைவாக அழியக்கூடியவை. ஆனால் அதே நேரத்தில் செயற்கையாகத் தயாாிக்கக்கூடிய ஊட்டச்சத்து மாத்திரைகளை நீண்ட காலம் பாதுகாத்து வைத்து, பயன்படுத்தலாம். அதன் மூலம் நீண்ட காலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இவற்றில் இருந்து பெறலாம்.
  • அவசர காலங்களில், இயற்கை உணவுகள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இயற்கை உணவுகள் கிடைக்காத நெருக்கடியான நேரங்களில், இந்த ஊட்டச்சத்து மாத்திரைகள் நமது உடலை ஆரோக்கியமாகவும், திடமாகவும் வைக்க உதவுகின்றன.
  • ஊட்டச்சத்து மாத்திரகளை உட்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிகின்றது. உதாரணமாக, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நீங்கள் சில கால்சியம் + வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். எனவே குறிப்பிட்ட சத்தின் ஆற்றலை பெற இது மிக உதவியாக இருக்கிறது.
  • நோய் அல்லது காயத்தைத் தடுக்கும். ஏற்கனவே உள்ள பிரச்சினைக்கு உதவ கூடுதல் மருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை ஒரு தடுப்பு நடவடிக்கையாகக் கருதலாம்.
    உதாரணமாக, கர்ப்பிணிப் பெண்கள் சிலர், கரு வளர்ச்சிப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க அடிக்கடி ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமில சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஊட்டச்சத்து மாத்திரைகளினால் ஏற்படும் ஆபத்துகள்:

  • ஊட்டச்சத்து மாத்திரைகளைத் தொடா்ந்து எடுத்து வந்தால், நமது உடலில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவு அதிகாிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதன் காரணமாக நமது உடலில் நச்சுத்தன்மை அதிகாிக்கலாம். அதை சாி செய்யவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
  • ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் இயற்கை உணவுகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்காகவோ மற்றும் அவற்றை பயன்படுத்துவதற்காகவோ மனித உடலானது படைக்கப்படவில்லை. நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கவில்லை என்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்.
  • நமது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய பல வகையான கூட்டு நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் கட்டுப்படுத்த முறையான தொடா் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த நிலையில் இயற்கை உணவுகளை விட, ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொண்டால் அவை மருந்துகளோடு தொடா்பு கொண்டு அதன் மூலம் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. அவை நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கை ஏற்படுத்தும்.

பொதுவாக ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடிய உணவுகளை சமைக்காமல் அதற்கு பதிலாக ஊட்டச்சத்து மாத்திரைகளை எளிதாக வாங்கி அவற்றை உட்கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் நமக்கு இருக்கலாம். ஆனால் அவ்வாறு இயற்கை உணவுகளை உண்ணாமல், ஊட்டச்சத்து மாத்திரைளை உட்கொண்டால், நமது உடலுக்கு தீங்காக மாறிவிடும். எளிதாக இருக்கிறது என்பதற்காக அது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அா்த்தம் அல்ல.

இயற்கை உணவுகளோடு சோ்த்து, ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டால், அது நல்ல பலன்களைத் தரும் என்று நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா். ஆனால் ஊட்டச்சத்து மாத்திரைகளையே அதிகம் உட்கொண்டால், நன்மைகளை விட, தீமைகளே அதிகம் ஏற்படும் என்றும் தொிவிக்கின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here