மலேசியாவில் தகுதியான அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாததால் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை

அரசாங்க மருத்துவமனைகளில் சுமார் 1,500 இருதயம் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பல்வேறு நிலைகளில் உள்ளனர். ஆனால் தகுதியான அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாததால் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்காக ஒரு வருடம் வரை காத்திருக்கும் நிலை உள்ளது.

தேசிய அளவில் மொத்தம்  கார்டியோடோராசிக் (இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள்) 14 பேர் மட்டுமே  அரசாங்க அறுவை சிகிச்சை நிபுணர்களாக உள்ளனர். நோயாளிகளின் வாழ்க்கைக்கு ஒரு புதிய மாற்றத்தை  வழங்க ஒவ்வொரு நாளும் அவர்கள் செயல்படுகின்றனர்.

மலேசிய மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஒரு முரண்பாடு,  அறுவை சிகிச்சை நிபுணர்கள் அரசாங்கப் பணியில் சேருவதற்குத் தடையாக இருந்தது. முட்டுக்கட்டையை உடைக்க, அரசாங்கம் அனுபவமுள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். நாங்கள் சிக்கலில் இருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் உள்ள எங்கள் 14 இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களில், நான் உட்பட பலர் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுகிறார்கள்.

மேலும் 1,500 நோயாளிகளில் பலருக்கு விரைவில் இருதயம் அல்லது நுரையீரல் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது  என்று சுகாதார அமைச்சகத்தின் இருதய அறுவை சிகிச்சை சேவைகளின் தலைவர் டத்தோ டாக்டர் பஷீர் அகமது அப்துல் கரீம் கூறினார். டாக்டர் பஷீர் மலேசிய தொராசி மற்றும் இருதய அறுவை சிகிச்சை சங்கத்தின் (MATCVS) தலைவரும் ஆவார். மற்றும் பினாங்கு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை துறைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சைக்கு RM80,000 அல்லது அதற்கு மேல் செலவாகும். அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் சுமார் 500 ரிங்கிட் கட்டணம் செலுத்துகின்றனர். மானியத்துடன் கூடிய பொது சுகாதார சேவைக்கான நம் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு கேள்விகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் உலகின் மிகச் சிறந்த ஒன்றாகும்.

ஆனால் எங்களுக்கு அதிக அறுவை சிகிச்சை நிபுணர்கள் தேவை என்று அவர் தி ஸ்டாரிடம் கூறினார். சுகாதார அமைச்சகம், 2016 முதல், அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க,  MATCVS, Academy of Medicine Malaysia, Universiti Malaya, and the Royal College of Surgeons of Edinburgh in the United Kingdom ஆகியவற்றுடன் இணைந்து மருத்துவமனைகளில் Parallel Pathway Programme (PPP)  என்ற பயிற்சி முறையை உருவாக்கியதன் மூலம் ஒரு அற்புதமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஆனால் பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்களை முழுத் திறனுடன் சேவை செய்ய அனுமதிப்பதில் அமைச்சகம் தடையாக இருந்தது.

மருத்துவத் தொழிலில் கொள்கை விஷயங்களைக் கண்காணிக்கும் அரசு, தனியார் துறை மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து நியமிக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய சட்டப்பூர்வ அமைப்பான மலேசிய மருத்துவ கவுன்சிலால் (MMC) முழுமையாக பயிற்சியும் சான்றிதழும் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்களில் நான்கு பேர் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here