தனது இந்தோனேசிய காதலியை கொலை செய்ததாக பாகிஸ்தானியர் மீது குற்றச்சாட்டு

பாங்கி: தனது இந்தோனேசிய நாட்டு காதலியை கொன்றதாக புல்வெட்டுபவரான பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆடவர் மீது பண்டார் பாரு, பாங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் நிர்வாணமான சடலத்தின் மேல் துணி ஒன்றினால் மூடப்பட்டிருந்த போது, செமினி அருகில் உள்ள ஒரு உணவுக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹஷ்மத் கான்(23) என்ற குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஆடவர், இந்த ஆண்டு செப்டம்பர் 25 க்கும் செப்டம்பர் 28 ஆம் தேதி 7.33 மணிக்கும் இடையில், செமினி, பண்டார் ரிஞ்சிங், ஜாலான் 1/1A இல் உள்ள உணவு கடையில் பணிபுரிந்து வந்த ஜூலி (41) என்ற இந்தோனேசிய பெண்ணை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

எனினும், அவர் தரப்பில் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

ஹஷ்மத் மீதான குற்றச்சாட்டு நீதிபதி எஃபாண்டி நாசிலா அப்துல்லா முன்பு வாசிக்கப்பட்டது.

பின்னர், இவ்வழக்கை நீதிமன்றம் விசாரணைக்காக நவம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. துணை அரசு வழக்கறிஞர் ஹக்கீம் அமீர் அப்துல் ஹமீது அரசு தரப்பில் அஜராகி வழக்கை நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here