தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் தங்களால் மற்றவர்களுக்கு ஆபத்து என்பதை உணருமாறு பிரதமர் வலியுறுத்தல்

கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடப்படாத ஆசிரியர்கள் தங்களின் பாதுகாப்பிற்காகவும் மாணவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உடனடியாக  தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவுறுத்தினார்.

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை என்றாலும், நேருக்கு நேர் கற்பித்தல் மற்றும் கற்றல் அமர்வுகள் தொடங்கும் போது அவர்கள் தங்கள் மாணவர்களை உடல் ரீதியாக சந்திப்பார்கள் என்பதால் அவர்கள் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.

உதாரணமாக, தடுப்பூசி போடப்படாத தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கும், அவர்களுடைய சக ஆசிரியர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றனர். அதனால்தான் கல்வி அமைச்சகம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு  உறுதியாக உள்ளது.

நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் உங்களால் மற்றவர்களுக்கு ஆபத்தினை விளைவிக்கலாம் என்றால் எங்கள் சக ஊழியர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நாம் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். இன்று பகாங்கில் உள்ள SMK Bera Bandar 32 இல் Bera பாராளுமன்ற தொகுதியில் மாணவர்களுக்கு கணினிகள் வழங்கும் போது இஸ்மாயில் சப்ரி பேசினார். பகாங் கல்வி இயக்குனர் முகமது ரோஸ்லி அப்துல் ரஹ்மானும் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here