போலீஸ்காரர் போன்று ஆள்மாறாட்டம் செய்த நபர் கைது

காஜாங்: இங்குள்ள தாமான் TTDI யில் தன்னை போலீஸ் என்று ஆள்மாறாட்டம் செய்ததாக 30 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று அதிகாலை 2.29 மணியளவில், குடியிருப்பு பகுதியில் வீட்டு வாடகை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக காஜாங் OCPD துணை தலைவர் முஹமட் ஜைத் ஹசான் கூறினார்.

“அங்கிருந்தவர்கள் தலையிட்டு இரு குழுக்களையும் பிரித்தனர். இருப்பினும், அங்கிருந்த சந்தேக நபர் தன்னை ஒரு போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார், மேலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் ‘அதிகார அட்டை’ நிறையும் காட்டினார்” என்று இன்று (அக்டோபர் 19) அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

குழுக்களை பிரித்தவர்களில் ஒருவர், அங்கு ஏதோ தவறு இருப்பதாக சந்தேகித்து போலீசை தொடர்பு கொண்டார் என்றும் அவர் மேலும் கூறினார்.

“போலீஸ் உறுப்பினர்கள் வந்தபோது, ​​சந்தேக நபர் போலி அதிகார அட்டையைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்ததுடன், அவர் ஒரு போலீஸ்காரர் அல்ல என்பதை உறுதிப்படுத்தினார்கள். மேலும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, எதிவரும் வெள்ளிக்கிழமை (அக். 22) வரை மேலதிக விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

போலி அதிகார அட்டை, போலீஸ் செயல்பாட்டு சீருடை மற்றும் ஒரு ஜோடி கைவிலங்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் போலீசார் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றியதாக ACP முஹமட் ஜைத் கூறினார்.

“சந்தேகநபர் தன்னை ஒரு போலீஸ்காரராக காட்டிக்கொண்டு மற்ற வழக்குகளுடன் தொடர்பில் உள்ளாரா என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 012-3043034 என்ற எண்ணில் காவல்துறை ஆய்வாளர் ஹைருல் அனுவார் சுஹைமியை அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here