டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துலக சுற்றுலா பயணிகள் லங்காவிக்கு வரலாம் என்கிறார் அமைச்சர்

அடுத்த மாதம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க முடியும் என சுற்றுலா அமைச்சகம் நம்புகிறது.  மலேசியா மாநாடு & கண்காட்சி பணியகத்தின் “மலேசியா @ சரவாக் சந்திப்பு” நிகழ்வில், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் நான்சி சுக்ரி, கடந்த மாதம் உள்நாட்டு சுற்றுலாவை மீண்டும் தொடங்குவதற்கான முன்னோடியாக லங்காவி இருந்தது என்றார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டிசம்பர் லங்காவி வர அனுமதி வழங்கப்படும் என்று நம்புவோம்.  மேலும் முதலில் திறக்க வேண்டிய நாடுகளின் பட்டியலை வழங்குமாறு எங்களிடம் கேட்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். அது நடைமுறைக்கு சரியாக இருந்தால், மற்ற நாடுகளுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பயணத்தை ஊக்குவிக்க மேலும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.

நான்சி, சுற்றுலா துறையினரின் போராட்டங்களை நன்கு அறிந்திருந்ததாகவும், அவர்களில் பலர் அனைத்துலக சுற்றுலா பயணிகள் திரும்பி வருவதை பார்க்க விரும்புவதாகவும் கூறினார். நாங்கள் புரிந்துகொள்கிறோம்.  அதனால்தான் நாங்கள் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்கிறோம் என்று சரவாக் சுற்றுலாத் துறையின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது கூறினார்.

செப்டம்பரில், உள்நாட்டு சுற்றுலாவுக்கான முதல் “பயண குமிழி” லங்காவியாக இருந்தது.  அந்த நேரத்தில் மாநில எல்லைகள் மூடப்பட்டிருந்தாலும் மலேசியர்கள் தீவுக்கு நேரடியாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த மாத தொடக்கத்தில், முழு தடுப்பூசி போடப்பட்ட மலேசியர்களுக்காக மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் அனைத்துலக பயணம் மீண்டும் தொடங்கியது. வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள்  நாட்டிற்கு திரும்பும்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here