அலோர் காஜாவில் ஆடவர் ஒருவரை ஆயுதம் கொண்டு தாக்கிய குழுவில் 6 பேரை மலாக்கா போலீஸ் கைது செய்துள்ளது

கோலாலம்பூர், அக்டோபர் 23:

கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி மலாக்காவின் அலோர் காஜாவில் உள்ள தாமான் செபாங் முத்தியாரா கடேக்கில் ஒருவரை குழுவாகச் சேர்ந்து தாக்கிய குற்றச்சாட்டில், 24 முதல் 36 வயதுடைய ஆறு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.

மலாக்கா குற்றப் புலனாய்வுத்துறை (CID) தலைவர் அஸ்லான் அபுவின் கூற்றுப்படி, சம்பந்தப்பட்டவர்களான ஸ்ரீ ஷசீந்திரன் த/பெ சுந்தர சிகனன், 30; தவனேஸ்வரன் த/பெ R. சின்னப்பன், 30; சிவலிங்கம் த/பெ செல்லையா, 29; காளிதாசன் த/பெ நடராஜ், 29; பிரேம் குமார் த/பெ T. வாசு, 27; மற்றும் சஞ்சித் குமார் த/பெ சுப்பிரமணியம், 29 ஆகிய அறுவரையே போலீஸ் கைது செய்துள்ளது என்றார்.

“இதுவரை, எட்டு நபர்கள் செப்டம்பர் 6 முதல் 7 வரை Op Cantas நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டனர், அவர்களில் ஒருவர் கொலை முயற்சி குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307 இன் கீழ் அலோர் காஜா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

“இன்னும் தலைமறைவாக உள்ள நபர்கள் கைது செய்யப்படும் வரை, இந்த வழக்கு தொடர்பான எந்த ஊகங்களையும் மக்கள் வெளியிட வேண்டாம் என்றும், இது தொடர்பில் சமூகத்தின் ஒத்துழைப்பு காவல்துறைக்கு தேவை என்றும் மலாக்கா காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது,” என்று அவர் கூறினார் என்று பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 5 ம் தேதி, 34 வயதுடைய ஒரு நபர், தாமான் செபாங் முத்தியாரா கடேக்கில், கூர்மையான ஆயுதங்கள் ஏந்திய நபர்கள் கொண்ட ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார். மேலும் கூரிய ஆயுதத்தால் வெட்டியதில் பாதிக்கப்படடவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here