இந்திய மைக்ரோ தொழில்முனைவோருக்கு 5 மில்லியன் ரிங்கிட் மானியம்

(Our Editor S.Vengadesh)

புத்ராஜெயா:

நாடு தழுவிய அளவில் உள்ள மைக்ரோ, சிறு, நடுத்தரத் தொழில்முனை வோருக்கு உதவும் வகையில் மடானி மைக்ரோ திட்டத்தின் வாயிலாக 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுக் கழக அமைச்சின் கீழ் இயங்கும் SME கார்ப்பரேஷன் தரப்பு வாயிலாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இந்த மைக்ரோ மடானி திட்டத்தின் வாயிலாக மானியம் (கிராண்ட்), கடன், பதிவு பற்றுச்சீட்டு உள்ளிட்ட அம்சங்களில் நிதி உதவி வழங்கப்படுவதாக நேற்று நடைபெற்ற இதன் அறிமுக விழாவில் பேசிய தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுக்கழகத் துறை அமைச்சர் டத்தோ இவோன் பெனாடிக் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதனைப் பெற முனைபவர்கள் http://smecorp.gov.my/MIKROMADANI அகப் பக்கத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக 5 பேருக்கும் குறை வான தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனத் தரப்பினரும் ஆண்டுக்கு 300,000 ரிங்கிட்டிற்குக் குறைவான வருமானத்தை ஈட்டும் தொழில்முனை வோரும் மட்டுமே இந்த விண்ணப்பத்தைச் செய்ய முடியும் என முதன்மை விதிமுறை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடன் வடிவிலான உதவிகளின் மூலம் மைக்ரோ, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோர்கள் 200,000 ரிங்கிட் வரையில் தங்கள் தொழிலுக்கான முதலீடு, தளவாடத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும்.

மலேசிய நிதி தொழில்துறை மேம்பாட்டு நிறுவனத்துடனான கூட்டமைப்பில் வழங்கப்படும் இந்தக் கடனுதவிக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக 2 விழுக்காடு வட்டி விகிதம் விதிக்கப்படுகின்றது.

அதேபோல் மைக்ரோ, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோர் அந்தஸ்து பதிவுப் பற்றுச்சீட்டுத் திட்டத்தில் தொழில்முனைவோர்கள் பதிவு செயல்பாட்டுக் கட்டணத்திற்காக 100 ரிங்கிட் உதவியைப் பற்றுச்சீட்டு வழியில் பெறுவர் என அமைச்சர் விவரித்தார்.

இந்நிலையில் நாளை தொடங்கி நாடு தழுவிய அளவில் இந்த மைக்ரோ மடானி திட்டத்தைப் பிரபலப்படுத்துவதற்குத் தமது தரப்பு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக SME Corp தரப்பு தலைமைச் செயல் அதிகாரி ரிஸால் நைனி தெரிவித்தார்.

பகாங், குவாந்தானில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சிகள் இதர பகுதிகளில் தொடரப்பட்டு அடுத்த மாதம் 17ஆம் தேதி சபா, கோத்தாகினபாலுவில் நிறைவுபெறும்  எனவும் அவர் கூறினார்.

நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 16 பேருக்கு அமைச்சர் வர்த்தக தொடக்க மானியம் மாதிரி காசோலைகளையும் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுக்கழகத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஸுராய்னி அகமட், மலேசிய எஸ்எம்இ கார்ப் நிறுவனத் தலைவர் டான்ஸ்ரீ பெர்னார்ட் கிலோக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதனிடையே மைக்ரோ தொழில்துறை, வர்த்தகங்களில் ஈடுபடும் இந்தியர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தின் கீழ் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப் பட்டுள்ளதாக  துணையமைச்சர் சரஸ்வதி தெரிவித்தார்.

இந்த நிதியானது மானியம் முறையில் தொழில்முனைவோருக்கு எஸ்எம்இ கார்ப் வாயிலாக வழங்கப்படும். முன்னதாகப் பிரதமர் அறிவித்திருந்த மடானி பொரு ளாதாரத் திட்டத்தின் கீழ் மைக்ரோ, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோருக்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.

அதில் 39 மில்லியன் ரிங்கிட் மானியம் வடிவில் இந்தத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படுகிறது. அதிலும் 5 மில்லியன் ரிங்கிட் நிதி இந்திய மைக்ரோ தொழில்முனைவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மானியம் வாயிலாக நிதி உதவி பெறுபவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

குறிப்பாக இந்த மானியம் தொழில் தொடங்குவதற்கு வழங்கப்படும் உதவி அல்ல. மாறாக ஏற்கெனவே தொழில் செய்துவரும் மைக்ரோ தொழில்முனை வோர்கள் தங்கள் தொழிலை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்ல வழங் கப்படும் உதவியாகும்.

இந்த மானியத்தைப் பெறுவதற்கான விண்ணப்பம் அக்டோபர் 31ஆம் தேதி வரை திறந்திருக்கும். இந்த விண்ணப்பத்தைச் செய்யும் வழிமுறைகள் குறித்த கையேட்டினைத் தமிழ்மொழியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here