கோத்தா ஸ்டாரில் வெள்ள நிலைமை சீரடைந்து வருவதால் நான்கு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் மூடப்பட்டன

அலோர் ஸ்டார், நவம்பர் 9 :

கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் வெள்ள நிலைமை மேம்பட்டதைத் தொடர்ந்து, அங்கு செயல்பாட்டிலிருந்த நான்கு வெள்ள நிவாரண மையங்களை (PPS ) மூடப்பட்டன.

கெடா சிவில் தற்காப்புப் படையின் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத் தலைவர் மேஜர் முஹமட் முவாஸ் முகமட் யூசாஃப் கூறுகையில், வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்த 150 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட பின்னர், SK சுகா மெனந்தி, SK தாருல் ஹிக்மா, SK கான்வென்ட் மற்றும் SMK சிம்பாங் குவாலா ஆகிய நான்கு PPSகளும் இன்று மாலை 4 மணிக்கு மூடப்பட்டது என்றார்.

கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இன்னும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 114 பாதிக்கப்பட்டவர்கள் பிபிஎஸ் SMK கான்வென்ட்டிலுள்ள PPSஇல் மட்டுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

“பெண்டாங் மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்த 266 பேரின் எண்ணிக்கை இன்று 229 பேராக குறைந்துள்ளதால் அங்கும் நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளது” என்று அவர் இன்று அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் முவாஸ் கூறுகையில், 43 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேர் இன்னும் தானா மேராவில் உள்ள திவான் ரகான் சுகானில் தஞ்சம் அடைந்துள்ளனர், மேலும் 20 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் திவான் செந்தரவாசியிலுள்ள PPSஇல் தங்கியுள்ளனர்.

“இன்று மாலை 4 மணி நிலவரப்படி, பெண்டாங் மற்றும் கோத்தா ஸ்டார் மாவட்டங்களில் உள்ள மொத்தம் மூன்று நிவாரண மையங்களில் 91 குடும்பங்களைச் சேர்ந்த 343 பேர் இன்னும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here