18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோஸ் பெறலாம்- சுகாதார இயக்குநர் ஜெனரல் தகவல்

புத்ராஜெயா, நவம்பர் 12 :

கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியை, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணிப் பணியாளர்களை தவிர, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும், நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக சுகாதார அமைச்சகம் (MOH) விரிவுபடுத்தும்.

MOHஇன் மருத்துவ நிபுணர் குழு, பல்வேறு ஆதாரங்களில் இருந்து பூஸ்டர் டோஸ்களின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை ஆய்வு செய்ததாகவும், ஒரே ஒரு பூஸ்டர் டோஸ் கோவிட்-19க்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளதாகவும் சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“MOH கோவிட்-19 இன் முன்னேற்றத்தை அவ்வப்போது கண்காணிக்கும், அதே நேரத்தில் கோவிட்-19 இலிருந்து மலேசியக் குடும்பங்கள் உகந்த பாதுகாப்பை பெறுவதை உறுதிசெய்ய கூடுதல் டோஸ்கள் மற்றும் பூஸ்டர் டோஸ்களை வழங்கும் தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தை (PICK) தொடரும் என்றார்.

மேலும் “இதுவரை தடுப்பூசியைப் பெறாதவர்கள், நீங்கள் இப்போது கோவிட்-19 நோய்த்தொற்றைப் பெறும் அபாயத்தில் உள்ள குழுவில் உள்ளீர்கள். “MOH இன் ஆலோசனையின்படி , உடனடியாக பதிவு செய்து, கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுங்கள், இதனால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இந்த ஆபத்தான வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்” என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here