சிலாங்கூரில் குடும்ப வன்முறை வழக்குகள் தொடர்ந்து அதிகரிப்பு; டாக்டர் சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், நவம்பர் 29 :

சிலாங்கூரில் கடந்த ஆண்டு பதிவான 1,349 வழக்குகளுடன் ஒப்பிடும்போது, ​​இந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 1,519 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பைக் காட்டுகிறது என்று மாநில பொது சுகாதாரம், ஒற்றுமை மற்றும் பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின் தலைவர் டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் தெரிவித்தார்.

இது 2018 ஆம் ஆண்டில் 951 வழக்குகளும், 2019 ஆம் ஆண்டில் 1,159 வழக்குகளும் ஆக பதிவாகியுள்ளன.

“வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, குறிப்பாக சிலாங்கூரில் நடக்கும் குடும்ப வன்முறை வழக்குகள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய SELamat ஹாட்லைனை உருவாக்குவது உள்ளிட்ட சில முயற்சிகளை மாநில அரசு எடுத்துள்ளது.

“இது நவம்பர் 1 முதல் செயல்பட்டு வருகிறது, நவம்பர் 24 வரை, SELamat லைனுக்கு 14 அழைப்புகள் வந்தன, இவற்றில் ஏழு உளவியல், உடல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்டவை” என்று இன்று நடந்த சிலாங்கூர் மாநில சட்டப் பேரவை கூட்டத்தில், ஜுவைரியா சுல்கிஃப்லியின் (PH-Bukit Melawati) கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.

“பெறப்பட்ட அனைத்து அழைப்புகளும் அவசரமற்றவை, ஏனெனில் அவர்கள் அழைப்பதற்கான காரணம் அவர்களின் உணர்ச்சிகளை நிர்வகிக்க உதவும் ஆலோசனையைப் பெறுவதற்காகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் மாநிலச் செயலாளரின் அலுவலகத்தின் ஆலோசனை மையத்தின் கீழ் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சஹாபத் வரிசையின் தகுதிவாய்ந்த ஆலோசகர்களிடமிருந்து நேருக்கு நேர் அல்லது ஆன்லைன் ஆலோசனை அல்லது கூடுதல் தலையீட்டைப் பெறுவதற்கான தேர்வை SELamat துரிதசேவை வழங்கியதாக டாக்டர் சித்தி மரியா கூறினார்.

மேலும் குடும்ப வன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் 03-64195027 என்ற எண்ணில் உள்ள 24 மணி நேர SELamat துரித எண்ணிற்கு அழைக்கலாம். இது வனிதா பெர்தயா சிலாங்கூரின் (WBS) மேற்பார்வையின் கீழ் உள்ளது.

மேலும் இது சிலாங்கூரில் உள்ள 56 மாநிலத் தொகுதிகள் மற்றும் கூட்டாளர் அலுவலகங்களில் உள்ள தனது Facebook மற்றும் Instagram, Pusat Wanita Berdaya (PWB) இல் இந்த லைன் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. அத்தோடு குடும்ப வன்முறை பிரச்சினையில் விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்காக சட்ட ஆலோசனை என்பவற்றையும் முன்னெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here