சித்திரவதை செய்யப்பட்ட 5 வயது சிறுவன் மரணம்

இஸ்கண்டார் புத்ரி: தாய், வளர்ப்புத் தந்தை மற்றும் தாயாரால்  சித்திரவதை செய்யப்பட்டு ஜோகூர்பாரு  சுல்தானா அமீனா மருத்துவமனையில் 5 வயது சிறுவன் மரணமடைந்துள்ள  இஸ்கண்டார் புத்ரி  போலீஸார்  தெரிவித்தனர்.

இச்சம்பவம் கடந்த 3.12.2021இல் இரவு 12 .20 மணிக்கு நிகழ்ந்தது என்றும் மருத்துவமனையிலிருந்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டிருப்பதாக கூறினர்.

இந்தச் சிறுவன் தன் 35 வயது தாயுடனும் வளர்ப்புத் தந்தையுடனும் (வயது 32), தம்பி மற்றும் தமக்கையுடன் நூசா பெஸ்தாரி வாடகை வீட்டில்  வசித்து வந்ததாக  விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் துணை சூப்ரிடெண்டென்டன் சூல்கைரி மொக்தார் சொன்னார்.

சித்திரவதைக்குள்ளான அந்தச் சிறுவனின் வாயில் காயம் காணப்பட்டதுடன் உடல் முழுவதும் வீக்கம் இருந்ததாக சொன்னார்.

ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேரந்த  தடயவியல் நிபுணர்கள், குளியலறையில் ரப்பர் குழாய், சோஃபாவில் மரக்கட்டை மற்றும் பாலி பைப் மற்றும் சந்தேக நபரின் வீட்டில் ரத்தத்தின் தடயங்கள் (ஸ்வாப்ஸ்) ஆகியவற்றைக் கண்டறிந்தனர். அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுவன் ஜோகூர்  சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக  மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு தாயார் மற்றும்  வளர்ப்புத் தந்தை கைது செய்யப்பட்டனர் என்று சூல்கைரி மொக்தார் குறிப்பிட்டார்.

இதனிடையே  போலீஸாரின் தொடர் விசாரணையில் சந்தேக நபர்களின் கடந்தகால பதிவுகளை ஆய்வு செய்ததில், அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான கடந்தகால குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. சிறுநீர் பரிசோதனையில்  அவர்கள் போதைப்பொருள்  உட்கொள்ளவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கு முன்பு இறந்த சிறுவனின் தமக்கையும் இவ்வாறு துன்புறுத்தலுக்கு ஆளானார் என்று குறிப்பிட்டார்.இந்த துன்புறுத்தல் சம்பவம்  2001ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருவதாக போலீஸார்  தெரிவித்தனர்.

குற்றவியல் சட்டம் பிரிவு 302 மற்றும் குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31 (1) (A) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று துணை சூல்கைரி மொக்தார் தமது குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here