90 விழுக்காடு பதின்ம வயதினர் கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுள்ளனர்

கோலாலம்பூர், டிசம்பர் 6 :

நாட்டில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரில் சுமார் 90 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையாவது பெற்றுள்ளதன் மூலம், நாடு தனது அடைவுநிலையை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

“முதியோர்கள், உங்களுக்கான பூஸ்டர் சந்திப்பு கிடைத்தவுடன், தவறாது செலுத்திக் கொள்ளுங்கள்” என்று இன்று டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி, பதின்ம வயதினரில் 86.5 விழுக்காட்டினர் கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசியை முடித்துள்ளனர், 10 விழுக்காட்டினர் தடுப்பூசி போடாதவர்கள் என்று கோவிட்நவ் போர்டல் தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 77.9 விழுக்காட்டினர் அல்லது 25,879,889 நபர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர், அதே சமயம் 79.2 விழுக்காட்டினர் அல்லது 25,443,839 குறைந்தது ஒரு டோஸாவது பெற்றுள்ளனர். மேலும்22.4 விழுக்காட்டினர் அல்லது 7,317,045 பேர் இதுவரை தடுப்பூசி போட வில்லை.

சமீபத்திய கணிப்புகளின்படி, மலேசியா அடுத்த ஆண்டு மே 24 ஆம் தேதிக்குள் 80 விழுக்காடு அல்லது 26,125,920 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என நம்பப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 54,091,375 கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன, அதில் 2,958,239 பூஸ்டர் தடுப்பூசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here