சக மாணவரை கொடுமைப்படுத்திய 6 மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம்

கோல கங்சார் சுல்தான் அஸ்லான் ஷா மாரா ஜூனியர் சயின்ஸ் கல்லூரியில் (எம்ஆர்எஸ்எம்) நடந்ததாகக் கூறப்படும் கொடுமைப்படுத்துதல் வழக்கு விசாரணையில் உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த இடைநீக்கம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று கூறிய ஊரக வளர்ச்சி அமைச்சர் மஹ்திசீர் காலிட், மாணவர்களை கல்லூரியில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் முன்மொழிந்துள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக, காவல்துறைத் தலைவர் மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் கூறுகையில், 13 வயதுடைய மாணவர்கள் அனைவரும் நேற்று கோல கங்சார் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது தடுத்து வைக்கப்பட்டனர். இதுவரை, இந்த சம்பவம் தொடர்பாக ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here