சமீபத்திய வெள்ளத்தால் சேதமடைந்த புரோட்டோன் அதன் உரிமையாளர்களுக்கு, சில உதிரி பாகங்களுக்கு 20 விழுக்காடு தள்ளுபடியையும், சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்த வாடிக்கையாளர்களுக்கு பழுது பார்க்கும் கட்டணத்தில் 20 விழுக்காடு தள்ளுபடியையும் வழங்க இருக்கிறது.
அதுமட்டுமின்றி, கார் உற்பத்தியாளர் RM200 வரை இழுவைக் கட்டணத்தையும், வெளிப்புற மற்றும் எஞ்சின் இடத்தை சுத்தம் செய்வதற்கான கட்டணமாக RM100ஐயும் ஏற்கும். புரோட்டான் தலைமை நிர்வாக அதிகாரி எடார் ரோஸ்லான் அப்துல்லா, சமீபத்திய வெள்ளம் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை குறிப்பாக சிலாங்கூர் மற்றும் ஷா ஆலமை பாதித்துள்ளது.
எனவே, அவர்களின் வாகனங்கள் பழுதுபார்க்கப்படுவதை உறுதிசெய்யவும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் முன்னுரிமை என்பதை உறுதிப்படுத்தவும் நாங்கள் உதவ விரும்புகிறோம். அசாதாரண சூழ்நிலைகளுக்கு ஒரு அசாதாரண பதில் தேவைப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வாகனங்கள் விரைவில் பழுதுபார்க்கப்படுவதை உறுதிசெய்ய புரோட்டான் வேலை செய்யும். மேலும் இந்த நன்மைகளை அனுபவிக்க நேராக எங்கள் சேவை மையத்திற்குச் செல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்துகிறது என்று அவர் கூறினார்.