ஜோகூரின் கடைசி வெள்ள நிவாரண மையம் இன்று மூடப்பட்டது

ஜோகூர் பாரு, ஜனவரி 18 :

ஜோகூரின் சிகாமாட்டில் இன்று வரை செயல்பாட்டிலிருந்த கடைசி வெள்ள நிவாரண மையம் (செக்கோலா அகமா கெமெரே) இன்று நண்பகல் மூடப்பட்டது. அங்கு தங்கியிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளியேறியதை தொடர்ந்தே, அந்த மையம் மூடப்பட்டது.

ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஆர்.வித்யானந்தன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கம்போங் செபெராங் பத்து பாடாங்கில் இருந்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் வெள்ள நிவாரண மையத்திலிருந்து வெளியேறியதை தொடர்ந்தே, அது இன்று நண்பகல் 1 மணிக்கு மூடப்பட்டது.

இன்று மாலை வரை, ஜோகூரில் உள்ள 10 மாவட்டங்களிலும் வானிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், ஜோகூரில் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் சிகாமாட் மாவட்டமே மிக மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பொந்தியான் மற்றும்   கூலாய் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டுமே வெள்ள பேரழிவால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here