18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நான்கு மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் ஜனவரி 16 ஆம் தேதி வரை (தானியங்கி) தானாக வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
2019 இல் கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்களைத் தொடர்ந்து வாக்களிக்கக்கூடிய இளைஞர்களை அரசாங்கம் மதிக்கிறது என்று அவர் கூறினார்.
மலேசிய இளைஞர் சங்கங்களின் சங்கம் (MAYC) போன்ற இளைஞர் அமைப்புகள் இந்த ஜனநாயக செயல்முறையின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
நேற்றிரவு MAYC இன் 60 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இரவு விருந்தில் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறினார். இந்த விருந்து நிகழ்வில் கிளந்தான் மந்திரி பெசார் அகமது யாகோப் மற்றும் MAYC தலைவர் முகமட் சியாபுதீன் ஹாஷிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இஸ்மாயில் கூறுகையில், இளைஞர் அமைப்புகள் இளைஞர்களை வளர்ப்பதற்கு ஊக்கியாக தொடர்ந்து தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். மேலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் செயல்படவும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்கவும் அரசாங்கம் விரும்புகிறது என்றார்.
இளைஞர் அமைப்புகளை அரசியல் தளமாகவோ அல்லது தனிப்பட்ட லாபத்திற்காகவோ பயன்படுத்தக்கூடாது.