உலக வர்த்தக மையத்திலுள்ள உதவி மையங்கள் (Kiosk) தினமும் திறந்திருக்கும்

ஷா ஆலாம், பிப்ரவரி 19 :

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) உள்ள MySejahtera உதவி மையத்தில் (Assistance Kiosk) மார்ச் 15 வரை தினசரி 400 வரிசை எண் சிட்டைகள் மட்டுமே வழங்கப்படும் என்று MySejahtera இன் டூவிட்டர் கணக்கின் ஒரு டூவிட் மூலம் இன்று தெரிவித்தது.

WTCKL இல் உள்ள MySejahtera உதவி மையம் மார்ச் 15, 2022 வரை தினமும் திறந்திருக்கும் என்றும், காலை 9 மணி முதல் இறுதி வரை டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் அது அறிவித்தது.

“இந்த உதவி மையத்தில் MySejahtera இல் உள்ள தனிநபர்கள் அல்லது சார்ந்திருப்பவர்களின் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தப்படும், தவிர தொழில்துறை தடுப்பூசி மையத்தின் (PPV) கீழ் உள்ள தடுப்பூசி பிரச்சினையை இது உள்ளடக்கவில்லை” என்றும் அந்த இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, WTCKLக்கான வரிசை எண் சனிக்கிழமை வெளியிடப்பட்டதாக MySejahtera அறிவித்தது.

MySejahtera பயன்பாட்டில் சிக்கல்களை எதிர்கொள்ளும் பயனர்களின் நெரிசல் போன்றவற்றுக்கு இது தீர்வாக அமையும் என்று நம்பப்படுகிறது.

WTCKL தவிர, MySejahtera உதவி மையம் ஐடியல் கன்வென்ஷன் சென்டரில் (IDCC), ஷா ஆலாமில் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதி மற்றும் மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here