சிரம்பான், தம்பினில் கன மழையுடன் வீசிய புயலால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

சிரம்பான், பிப்ரவரி 21 :

சிரம்பான் மாவட்டம் மற்றும் தம்பினில், நேற்று நண்பகல் கனமழையுடன் வீசிய சூறைக்காற்றில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

சிரம்பான் மாவட்ட அதிகாரி, முகமட் நிஜாம் தாஜூல் ஆருஸ் கூறுகையில், இம்மாவட்டத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட புயலில் மொத்தம் 26 வீடுகள் மற்றும் ஒரு சமூக மண்டபம் என்பன சேதமடைந்தன.

“கம்போங் பாரு ரஹாங்கில் மொத்தம் 14 வீடுகள் மற்றும் ஒரு சமூக மண்டபம் என்பன சேதமடைந்துள்ளன, தாமான் செம்பகா, தாமான் ஸ்ரீ பாகி, தாமான் ராசா சயாங் மற்றும் கம்போங் செந்தோசா ஜெயா உட்பட மொத்தம் 12 வீடுகள் சேதமடைந்தன.

“சிரம்பான் மாவட்ட மற்றும் நில அலுவலகம், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு மதிப்பிடப்பட்ட சேதத்தை உடனடியாக சரிசெய்யும்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கேமாஸுக்கு அருகிலுள்ள ஃபெல்டா ஜெலாய் 1 முதல் 4 வரை 130 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை உள்ளடக்கிய சுமார் 30 வீடுகள் கடும் மழை மற்றும் புயல் காரணமாக சேதமடைந்துள்ளன.

நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், வாகனத்தின் மீது மரம் விழுந்ததுடன் வீட்டின் கூரையும் காற்றினால் பறந்து சென்றுள்ளது.

கேமாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் ஃபரித் அபு பக்கர் இதுபற்றிக் கூறுகையில், இச்சம்பவத்தில் இதுவரை காயங்கள் எதுவும் பதிவாகவில்லை ஆனால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மட்டும் அவர்களது வீடு மோசமாக சேதமடைந்ததால் ஃபெல்டா ஜெலாய் 1 குவார்ட்டர்ஸில் தங்க வைக்கப்பட்டனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here