RM1.2 மில்லியன் குத்தகை (tender) தொடர்பான தகவல் கசிவு ; கணவன், மனைவியை கைது செய்தது MACC

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 23 :

RM1.2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) குத்தகை (tender) தொடர்பான தகவல் கசிவு தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, ஒரு தம்பதியினர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் (MACC) கைது செய்யப்பட்டனர்.

44 மற்றும் 42 வயதான இருவரும் நேற்று பிற்பகல் புத்ராஜெயா MACC தலைமையகத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து, இன்று காலை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு சந்தேக நபர்களும் முற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக மாவட்ட நீதிபதி துவான் ஷா வீரா அப்துல் ஹலீம் இன்று முதல் மார்ச் 27, 2022 வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியல் உத்தரவை வழங்கினார்.

“LLM ஒப்பந்தத் தேர்வில் ஈடுபட்ட இயக்குநராக இருக்கும் சந்தேகத்திற்குரிய பெண், RM1.2 மில்லியன் மதிப்புள்ள டெண்டர் தகவல்களை தனது கணவரிடம் கசியவிட்டதாக நம்பப்படுகிறது.

“இதற்கு ஈடாக, 2020 ஆம் ஆண்டில் மின்னணு அமைப்புகள் தொடர்பான திட்டத்தைப் பெற முடிந்த மற்றொரு நிறுவனத்திற்கு, அவரது கணவரின் நிறுவனம் துணை ஒப்பந்தக்காரராக நியமிக்கப்பட்டது,” என்று அவர் இன்று கூறினார்.

MACC சட்டம் 2009 இன் பிரிவு 23 இன் கீழ் அவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் MACC தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here