பகாவ்வில் பயங்கரமான இரு நிமிட புயல்; பல வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் சேதம்

ஜெம்புல், ஏப்ரல் 12 :

இன்று இரண்டு நிமிடங்களுக்கு புயல் தாக்கியதில் பகாவ்வைச் சுற்றியுள்ள பல வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்தன.

பகாவ்வில் உள்ள ஒரு வங்கி ஊழியர், அல்வி அலியாஸ், 50, பிற்பகல் 3.20 மணியளவில் நடந்த சம்பவம் விரைவாக நடந்ததாகக் கூறினார்.

குடிமக்களின் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு, வணிக கட்டடங்கள் மற்றும் கடைகளின் மேற்கூரைகளும் புயலால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என்றார்.

“புயல் சேதத்தை ஏற்படுத்தியது மற்றும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மின் கம்பம் கூட சரிந்தது.

“நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான பல மோட்டார் சைக்கிள்களும் புயல் காரணமாக தலைகீழாக விழுந்தன. மேலும், புயல் காரணாமாக பல மரங்கள் முறிந்து வீடுகள் மற்றும் வாகனங்களை தாக்கிளன,” என்று அவர் NSTP-யிடம் கூறினார்.

38 வயதான சாதியா ஹமீது இதுபற்றிக் கூறும்போது, ஒரு துணிக்கடையில் இருந்தபோது பலத்த காற்று வீசிய சத்தம் கேட்டது, அங்கு ஒரு வணிக வளாகத்தின் மேற்கூரை காற்றினால் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டேன்.

மழையைத் தொடர்ந்து பெய்த புயல் நீண்ட நேரம் நீடிக்கவில்லை, ஆனால் அது மிகவும் பயமாக இருந்தது என்றார்.

“அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த எனது காருக்கு சேதம் ஏற்படவில்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சேதம் குறித்து பொதுமக்களிடம் இருந்து எந்த புகாரும் காவல்துறைக்கு வரவில்லை என்று ஜெம்புல் மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் ஹூ சாங் ஹூக் கூறினார்.

மேலும் இந்த சம்பவம் குறித்த சமீபத்திய தகவல்களை அப்பகுதியில் இருந்து போலீசார் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here