சரவணன் அமெரிக்க பயணத்தின் போது கட்டாய தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து தீர்வு காண முயற்சி மேற்கொள்வார்

கோலாலம்பூர்: மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன்  அமெரிக்க- ஆசியான் சிறப்பு உச்சி நிலை மாநாட்டில் மே 10 முதல் 13 வரை பங்கேற்பதற்கவுள்ளார்.

வாஷிங்டனின் தனது பணி பயணத்தின் போது, ​​கட்டாயத் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மலேசியாவின் நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வார்.

சரவணன் இன்று ஒரு அறிக்கையில், மலேசிய நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகள் தங்கள் விநியோகச் சங்கிலிகளில் கட்டாய தொழிலாளர் நடைமுறைகளிலிருந்து விடுபடுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்க அரசாங்கத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளையும் ஆராய்வதாக கூறினார்.

ஜெனீவா மற்றும் லண்டனுக்கு நான் மேற்கொண்ட சமீபத்திய பயணத்தைத் தொடர்ந்து கட்டாய உழைப்பு தொடர்பான அனைத்துலக தொழிலாளர் அமைப்பு (ILO) நெறிமுறை 29 இன் ஒப்புதலை டெபாசிட் செய்வதற்காக கட்டாய தொழிலாளர் முன்முயற்சி நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவேன் மற்றும் அதே பிரச்சினையில் ஐக்கிய இராச்சியத்துடன் கலந்துரையாடுவேன்.

எனவே, நான் அமெரிக்காவில் உள்ள தொடர்புடைய துறைகளை சந்திக்க திட்டமிட்டுள்ளேன், அதாவது அமெரிக்க தொழிலாளர் துறை மற்றும் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு, பொறுப்பான வணிகக் கூட்டணியுடன் ஒரு அமர்வு உட்பட என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here