லண்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெருஷன் மனோகரன் கொலை வழக்கில் கைது

தெற்கு லண்டனில் தனது பாட்டியைக் கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு குரோய்டனில் உள்ள முகவரி ஒன்றில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடுவதாக தகவல் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு சகுந்தலா பிரான்சிஸ் (வயது 89) என்ற பெண் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சகுந்தலாவின் பேரன் வெருஷன் மனோகரன் (வயது 31) என்பவரை புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

நேற்று குரோய்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மனோகரன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டார். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் இந்த கொலை தொடர்பாக மனோகரன் தவிர வேறு யார் மீதும் சந்தேகம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here