செப்.,15க்கு தள்ளிப்போன ‘லத்தி’ வெளியீடு

‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லத்தி’. ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர். போலீஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் உருவாகும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை பல்லாவரத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கிளைமாக்ஸ் சண்டைகாட்சிகள் படமாக்கியபோது சண்டை கலைஞர்கள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்க, அதில் டைமிங் மிஸ்சாகி எதிர்பாராத விதமாக காலில் நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்தார் விஷால்.

உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படப்பிடிப்பும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷாலுக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 15ம் தேதிக்கு வெளியீட்டை தள்ளிவைத்துள்ளனர். சிம்பு நடித்த ‛வெந்து தணிந்தது காடு’ படமும் அதேநாளில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here