சிலாங்கூர் ஷரியா நீதிமன்ற வழக்கு விசாரணைகளை இணையவழி நடத்துவதற்கான மசோதாக்கள் நிறைவேற்றம்

ஷா ஆலாம், ஜூலை 25 –

ஷரியா நீதிமன்றங்களின் நிர்வாகம் ரிமோட் கம்யூனிகேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வழக்கு விசாரணைகளை நடத்துவது தொடர்பான இரண்டு மசோதாக்களை சிலாங்கூர் மாநில சட்டமன்றம் இன்று நிறைவேற்றியது.

அந்த மசோதாக்களாக – இஸ்லாமிய மத நிர்வாக சட்ட மசோதா (சிலாங்கூர் மாநிலம்) (திருத்தம்) 2022 மற்றும் ஷரியா நீதிமன்ற நடவடிக்கைகள் (சிலாங்கூர் மாநிலம்) (திருத்தம்) மசோதா சட்டம் 2022 – ஆகிய இரண்டும் சிலாங்கூர் மாநில இஸ்லாமிய மத விவகாரங்கள், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் ஹலால் குழுவின் தலைவர் முகமட் ஜவாவி அஹ்மத் முக்னி தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கள் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களால் விவாதத்திற்கு பின்னர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் முகமட் ஜவாவி கூறுகையில், சிலாங்கூரில் உள்ள ஷரியா நீதிமன்றத்தில் இணையத்தில் நடத்தப்பட்ட முந்தைய வழக்குகள் இப்போது செல்லுபடியாகும் என்று சான்றளிக்கப்பட்டன என்றார்.

“2020 முதல் ஜூலை 2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் ஷரியா நீதிமன்றங்களால் ஆன்லைனில் நடத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், 1,184 வழக்குகள் உள்ளன.

“இறைவனின் கிருபையால், இன்று மாநில சட்டமன்றம் இத் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது, இன்று இந்த இரண்டு திருத்தங்களும் வர்த்தமானியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார், இது திருத்தம் ஏப்ரல் 17, 2020 முதல் நடைமுறைக்கு வந்தது என்றார்.

மலேசியாவில் இந்த மசோதாவை அரசிதழில் வெளியிட ஒப்புதல் அளித்த முதல் மாநிலம் சிலாங்கூர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here