70 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட 2-ம் உலகப் போர் வெடிகுண்டு

இரண்டாம் உலகப் போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அதன் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளால் இன்றும் மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில், இத்தாலியில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இத்தாலியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள ‘போ’ ஆறு 70 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டுள்ளது.

இதனால் போர்கோ, வெர்ஜிலியோ பகுதியில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 1000 பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டு ஆற்றில் இருப்பதை கடந்த மாதம் 25-ம் தேதி மீனவர் ஒருவர் கண்டுபிடித்தார். இதனையடுத்து வெடிகுண்டை மீட்ட அந்நாட்டு இராணுவம் மெட்டோல் பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வெடிக்க வைத்து அகற்றினர்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து நீண்டகாலம் கடந்தும் ஒவ்வோரு நாடுகளில் வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here