கழிவறை இருக்கையை விட தொலைபேசியில் அதிக பாக்டீரியாக்கள்…!!

வாஷிங்டன், நவம்பர் 5:

கழிவறை இருக்கைகளை விட தொலைபேசிகளில் 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சிகர ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன. சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்போனை எடுத்துச் செல்கிறோம்.

தொலைபேசியில் வைரஸ் தானே ஏறும்.. பாக்டீரியா எப்படி என்று கேள்வி கேட்க வேண்டாம்.

கொஞ்ச நஞ்சமல்ல.. கழிவறை இருக்கையை விட 10 சதவீத அதிக பாக்டீரியா நாம் பயன்படுத்தும் தொலைபேசிகளில் காணப்படுகின்றன. இதை உறுதிப்படுத்தியுள்ள அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இளம் வயதினரின் மொபைலில் குறைந்தது 17 ஆயிரம் பாக்டீரியாக்கள் இருப்பதாகவும், இது சாதாரண கழிப்பறை இருக்கையை விட 10 மடங்கு அதிகம் என்றும் அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here