பிரபல நடிகர் மரணம்

கன்னட திரை உலகின் மூத்த நடிகரான லோஹிதாஸ்வாவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

லோஹிதாஸ்வா 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பிரபல கன்னட நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், ஷங்கர் நாக், அம்பரீஷ் உள்ளிட்டோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சாரதி, கோம்பே, ஜெயசிம்ஹா, ஏகலவ்யா, அவதார புருஷா, சக்ரவர்த்தி, கடின ராஜா, காவேரி நாகரா, லாக்கப் டெத், மர்ஜாவால் கஜேந்திர உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.

நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மகன் ஷரத் லோஹிதாஸ்வா தமிழில் எதிர்நீச்சல், பாண்டியநாடு, காஷ்மோரா, வேலைக்காரன், கருப்பன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here