இந்திரா மக்கோத்தா நாடாளுமன்றத் தொகுதி இந்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்- டத்தோஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா வாக்குறுதி

பி. ராமமூர்த்தி, குவாந்தான், நவ. 18-

நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் இந்திரா மக்கோத்தா நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காத்துக்கொள்ள போட்டியிடும் சைஃபுடின் அப்துல்லா, தொகுதியில் உள்ள இந்திய மக்களுக்கான அனைத்து தேவைகள் குறிப்பாக கல்வி, வேலை வாய்ப்பு ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

மேலும் அவர் இந்திரா மக்கோத்தா தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்திரா மக்கோத்தா தொகுதியில் கல்வி அலையை உருவாக்குவது, தேசிய உயர்கல்வி – பள்ளிகளை ஒன்றிணைப்பது – தொழில்துறையுடன் பள்ளி, இலவச ஆன்லைன் டியூசன், பட்டதாரிகள் சங்கம், பெ.ஆசிரியர் சங்கம், அரசுசாரா இயக்கங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு.

அனைத்துலக தரம் வாய்ந்த இலக்கவியல் பொருளாதார மையம் அமைத்தல், சிகேஐபி (MCKIP) இலக்கவியல் தொழில்துறையின் வழி புதிய உத்வேகம், ஹலால் மையத்தை மேம்படுத்துதல்,

சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டம், அனைத்துலக கடற்கரை பகுதிகளில் கிராம தங்குமிடமாக உருவாக்குவதுநகர்ப்புற, கிராமப்புறச் சாலைகளை சீர்படுத்தி தரம் உயர்த்துதல், வீடுகள் உட்பட பழுதடைந்த பொது வசதிகளை சீர்படுத்துவது, குடிநீர், வெள்ளப் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுத்தல், நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்ல இலவச வேன் வசதியை ஏற்பாடு செய்துகொடுப்பது போன்ற தேர்தல் கொள்கை அறிக்கையே அவரின் வாக்குறுதி என இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மக்களைச் சந்தித்து கூறி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here