15வது பொதுத்தேர்தலுக்கான பிரச்சார காலம் இன்று இரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது

கோலாலம்பூர், நவம்பர் 18 :

கடந்த நவம்பர் 5ஆம் தேதி தொடங்கிய 15வது பொதுத் தேர்தலுக்கான பிரச்சார காலம் இன்று இரவு 11.59 மணிக்கு முடிவடைகிறது. எனவே அந்தக் காலத்திற்குப் பிறகு, எந்த பிரச்சார நடவடிக்கைகளுக்கும் அனுமதியில்லை.

நாளை நாடுமுழுவதுமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், மொத்தம் 59 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இடம்பெறும். எவ்வாறாயினும், பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளரான எம் கருப்பையாவின் மரணத்தைத் தொடர்ந்து, அங்கு வாக்களிப்பு நடைபெறுமா என்பது குறித்து பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியின் நிலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை மற்றும் தேர்தல் ஆணையம் இன்று கூடி அந்த தொகுதியின் நிலையை தீர்மானிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாடு முழுவதும் உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 945 வேட்பாளர்கள் போட்டியிடத் தகுதி பெற்றதை உறுதிப்படுத்திய தேர்தல் ஆணையம், கடந்த 14வது பொதுத்தேர்தலில் உள்ள 14.9 மில்லியன் வாக்காளர்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 21.1 மில்லியன் வாக்காளர்களாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here