‘பதான்’ படம் வெளியானது… ஷாருக்கான் உருவ பேனரை எரித்து போராட்டம்

பதான் படம் நேற்று திரைக்கு வந்த நிலையில் வட மாநிலங்களில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. பீகாரில் பகல்பூர் பகுதியில் தியேட்டர் முன்னால் வைத்திருந்த ஷாருக்கான், தீபிகா படுகோனே உருவ பேனர்களை கிழித்து தீவைத்து கொளுத்தினர்.

ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த பதான் படத்தின் பாடல் காட்சி ஏற்கனவே வெளியானபோது அதில் தீபிகா படுகோனே காவி நீச்சல் உடையில் நடித்து இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோனே கொடும்பாவியை எறித்தனர். பதான் பட பேனரையும் கிழித்து எரிந்தனர்.

இதையடுத்து பதான் படம் மறு தணிக்கைக்கு அனுப்பி சில காட்சிகளை நீக்கினர். இந்த நிலையில் பதான் படம் நேற்று திரைக்கு வந்த நிலையில் வட மாநிலங்களில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. பதான் படம் திரையிட்ட தியேட்டர்கள் முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகாரில் பகல்பூர் பகுதியில் தியேட்டர் முன்னால் வைத்திருந்த ஷாருக்கான், தீபிகா படுகோனே உருவ பேனர்களை கிழித்து தீவைத்து கொளுத்தினர். பதான் படத்தை புறக்கணிக்கும்படி வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்து வருகிறார்கள். எதிர்ப்பை மீறி பதான் படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

ரசிகர்களும் ஆர்வத்தோடு படம் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் பதான் தியேட்டரில் வெளியான சிறிது நேரத்திலேயே முழு படமும் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here