ஷாருக்கான் கையில் ரூ.5 கோடி வாட்ச்

தமிழக அரசியலில் சமீபத்தில் ரூ.5 லட்சம் கைக்ெகடிகாரம் விவகாரம் பரபரப்பை கிளப்பியது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இந்த விலை உயர்ந்த வாட்சை அணிந்து இருந்ததாக விமர்சனங்கள் வந்தன.

ஆனால் இந்தி நடிகர் ஷாருக்கான் ரூ.5 கோடி மதிப்பிலான கைக்ெகடிகாரத்தை அணிந்து திரையுலகினரை ஆச்சரியத்தில் வாய்பிளக்க வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஷாருக்கான் பங்கேற்றார்.

அப்போது அவர் கை மணிகட்டில் கட்டி இருந்த நீல நிற வாட்ச் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. அந்த வாட்சின் விலை மற்றும் எந்த நிறுவனம் தயாரித்தது என்பதை தேட ஆரம்பித்தனர். தற்போது ஷாருக்கான் கட்டி உள்ள வாட்சின் விலை இந்திய மதிப்பில் ரூ.4 கோடியே 92 லட்சம் என்று கண்டுபிடித்து வெளியிட்டு உள்ளனர்.

இது சராசரி இந்தியர்களின் வாழ்நாள் வருமானத்தைவிட அதிகம் என்று பலரும் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஷாருக்கான் மும்பையில் கடல் பார்த்து கட்டியுள்ள வீட்டின் விலை ரூ.200 கோடி என்கின்றனர். நிறைய வெளிநாட்டு சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here