அம்னோ உதவித் தலைவர் பதவிக்கு ஜம்ரி போட்டி

 கோலாலம்பூர்: அம்னோ உச்சமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர்  2023-2026 தவணைக்கான மூன்று அம்னோ உதவித் தலைவர் பதவிகளில் ஒன்றில் போட்டியிடும் விருப்பத்தை இன்று அறிவித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் தனது வேட்புமனுவை முகநூல் பதிவின் மூலம் அறிவித்தார். 2023-2026 காலத்திற்கான மூன்று அம்னோ உதவித் தலைவர் பதவிகளுக்கு நான் வேட்பாளராக இருக்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் அனைவரும் உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

அம்னோ தேர்தல்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறும். வனிதா, இளைஞர் மற்றும் புத்ரி பிரிவுகளுக்கான கிளை தேர்தல்கள் பிப்ரவரி 1 முதல் 26 வரை நடைபெறும்.

வனிதா, இளைஞரணி மற்றும் பிரதேச குழுக்களுக்கான மாநிலத் தேர்தல்கள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மார்ச் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அம்னோ பிரிவு பிரதிநிதிகள் கூட்டங்கள் மற்றும் தேர்தல்கள் அம்னோ உச்ச மனேஅ உறுப்பினர்களின் தேர்தலுடன் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 18 அன்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here