‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு மேலும் 4 சர்வதேச விருது

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திய ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.

ஆஸ்காருக்கு அடுத்த உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்தது.

கிரிடிக் சாய்ஸ் விருதுகளும் கிடைத்தன. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடந்த ஹாலிவுட் விமர்சகர்கள் சங்க விருது விழாவில் ஆர்ஆர்ஆர் படத்துக்கு சிறந்த சர்வதேச படம், சிறந்த ஆக்ஷன் படம், சிறந்த பாடல், சிறந்த சண்டை ஆகிய 4 விருதுகள் கிடைத்துள்ளன.

இந்த விருதுகளை ராம்சரண், ராஜமவுலி, கீரவாணி ஆகியோர் நேரில் சென்று பெற்றுக்கொண்டனர். நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here