இந்தோனேசியாவில் வெடித்து சிதறியது மெராபி எரிமலை

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இங்கு, யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் , 2,968 மீட்டர் (9,721 அடி) உயரமுள்ள மெராபி எரிமலை, நள்ளிரவு வெடித்துச் சிதறியது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதி கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு வழிந்தோடும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. எரிமலையில் இருந்து வெளிவரும் சாம்பல், அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த மெராபி எரிமலை 450 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு சூழல்களில், எரிமலைக் குழம்பை வெளியேற்றி வருகிறது.

இந்த எரிமலை கடந்த 2010ம் ஆண்டு வெடித்த போது 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here