உதயநிதி ஸ்டாலின் செயலை கண்டித்து ம.இ.கா அமைதி பேரணி – இந்திய துதரகத்திடம் மகஜர்

கோலாலம்பூர்:

னாதன தர்மத்தை இழிவாக பேசியதாக தமிழ் நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ம.இ.கா இந்திய தூதரகத்திடம் மகஜர் வழங்கவுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சனாதான தர்மம் என்பது இந்து மதத்தில் பழமைமிக்க கடைபாடாகும். அதனை இழிவுப்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.

எனவே அவரின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 29ஆம் தேதி மாலை 4 மணியளவில் ம.இ.காவினர் அமைதி பேரணி நடத்தி இந்திய தூதரகத்தில் மகஜர் வழங்குவவோம்.

உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்க கோரி அந்த மகஜரில் நாங்கள் வலியுறுத்துவோம். இது குறித்து இன்று நடைபெற்ற கட்சி மத்திய செயலவை கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இது தவிர மலேசியாவில் இனி உதய நிதியின் திரைப்படங்களை திரையிட கூடாது எனவும் வலியுறுத்தி தகவல், இயக்கவியல் அமைச்சர் ஃபாமி பட்ஸிலிடமும் வழியுறுத்துவோம்.

மலேசியா கடவுள் நம்பிக்கை கொண்டுள்ள நாடாகும். எனவே இது போன்ற சமய அவமதிப்பு செயல்களை ம.இ.கா ஒருபோதும் ஏற்காது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here