காஷ்மீரில் நிலநடுக்கம்… விஜய் படக்குழுவினர் நிலைமை என்ன?

வடஇந்தியாவில் பல்வேறு இடங்களில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா, காஷ்மீர் போன்ற மாநிலங்களில் 45 நொடிகள் முதல் 1 நிமிடம் வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியானது. காஷ்மீரில் விஜய் நடிக்கும் லியோ படப்பிடிப்பு நடந்து வருவதால் படக்குழுவினர் நிலைமை என்ன ஆனது என்ற பரபரப்பு ஏற்பட்டது.

பலரும் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கினர். இதுகுறித்து படக்குழுவினர் தரப்பில் கூறும்போது, “லியோ படக்குழுவினர் தங்கி இருந்த ஓட்டல்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. உடனே ஓட்டல் அறையில் இருந்து அனைவரும் அவசரம் அவசரமாக வெளியே வந்து விட்டோம். விஜய் உள்ளிட்ட எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்றனர்.

லியோ பட தயாரிப்பு நிறுவனமும் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் லியோ படக்குழுவினர் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவித்து உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் தங்கள் காட்சிகளில் நடித்து முடித்து சமீபத்தில் சென்னை திரும்பி விட்டனர். விஜய், திரிஷா உள்ளிட்ட பலர் அங்கேயே தங்கி இருந்து நடித்து வருகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here